×
Saravana Stores

விவசாயிகளிடம் ரூ.2.40 லட்சம் லஞ்சம் ஊராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கனகராஜ், ரவிச்சந்திரன். விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் குழாய் இணைப்புக்காக கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இதற்காக ஊராட்சி மன்ற தலைவி மல்லிகா, துணை தலைவர் சண்முகம், ஊராட்சி செயலாளர் ராஜூ ஆகியோர் ரூ.2.40 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் இருவரும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த ரூ.2.40 லட்சத்தை விவசாயிகள் நேற்று ஊராட்சி தலைவி மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம், செயலாளர் ராஜூவிடம் கொடுத்தனர். அப்போது மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

மின்வாரிய உதவி பொறியாளர் சிக்கினார்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சல்வார்பட்டியில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு வெம்பக்கோட்டை மின் பகிர்மான கழகத்தில் மனு அளித்தார். இதற்கு உதவி மின் பொறியாளர் சேதுராமன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். பின்னர் நேற்று மாலை தனது கம்பெனிக்கு அழைத்து ரூ.10 ஆயிரத்தை கொடுத்தபோது போலீசார் உதவி பொறியாளர் சேதுராமனை கைது செய்தனர்.

* ரூ.40,000 லஞ்சம் பெற்று புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர்களை விடுவித்த 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
திருவாரூர் வைப்பூர் அருகே கடந்த 27ந்தேதி மாலை திருவாரூர் மதுவிலக்கு ஏட்டுகள் ஹரிகரன் (40), கணேசன் (36) ஆகியோர், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் இருந்து திருப்பூர் சென்ற ஆம்னி வேனில் சோதனை நடத்தினர். அதில் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திய வேன் டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிந்தனர். பின்னர் 3 பேரை சொந்த ஜாமீனில் விடுவித்ததோடு, இதற்காக ரூ.40ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து எஸ்பி ஜெயக்குமார் விசாரித்ததில் இருவரும் மேலதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் லஞ்சம் பெற்று சொந்த ஜாமீனில் விடுவித்தது ெதரிய வந்தது. இதையடுத்து ஏட்டுகள் ஹரிஹரன், கணேசன் ஆகிய இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

The post விவசாயிகளிடம் ரூ.2.40 லட்சம் லஞ்சம் ஊராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Kothamangalam ,Erode District Bhavanisagar ,Kanakaraj ,Ravichandran ,Kothamangalam Uratchi Council ,Mallika ,Sanmugam ,Oradasi ,
× RELATED போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு