×

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடத்தை மீட்டுத்தரக்கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர், ஜூலை 30: எங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தாலுகா கூத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாராணி (70). அவரது கணவர் முத்துக்குமரன். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மகன் பந்தளராஜா மாற்றுத்திறனாளி. எங்களுக்கு சொந்தமாக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூதலூர் தாலுகாவில் 13 சென்ட் இடம் உள்ளது. இந்த சொத்து எனது கணவர் வழியில் கிடைக்கப்பெற்ற பூர்வீக சொத்தாகும். மேலும் சொத்து வரி கட்டி மின் இணைப்பு பெற்று வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீட்டிற்கும் மேற்புறத்தில் சந்திரகாசன் மகன் முருகானந்தம் குடியிருந்து வருகிறார்.

சுமார் 6 மாதத்திற்கு முன்பு நானும் எனது மகனும் ஊரில் இல்லாத நேரம் பார்த்து முருகானந்தம், எங்கள் இடத்தில் சுமார் 7 சென்ட் நிலம் ஆக்கிரமித்துள்ளார். எனது வீட்டிற்கு மேற்புறத்தில் ஹாலோ பிளாக் கல் போட்டு சுவர் எழுப்பி உள்ளார். இதுகுறித்து கேட்டபோது முருகானந்தம் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது மீறி என் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால் ஆண் துணை இல்லாத உன்னை அடித்து கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்ட விடுத்து வருகிறார். மேலும் அந்த இடத்தில் கடை கட்ட முயற்சி செய்து அதற்கு கல் மற்றும் மணல் ஆகிய உபகரணங்களை எங்களது இடத்தில் போட்டுள்ளார். எனக்கு தற்பொழுது சுமார் 70 வயது. எனது மகன் உடல்நிலை சரி இல்லை. வயதாகி விட்டதாலும் எங்களுக்கு சொந்தமான இடத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்பவர் மீது திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளோம். எனவே எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து மீட்டு தர வேண்டும், என கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியிடம் நேற்று மனு அளித்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் இடத்தை மீட்டுத்தரக்கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Thirukkatupalli ,Collector ,Thirukkatupalli taluk Koothur ,
× RELATED மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல்...