×

தரை தளத்துடன் சட்டவிரோதமாக செயல்பட்ட 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’: டெல்லி மாநகராட்சி நடவடிக்கை

புதுடெல்லி: தரை தளத்துடன் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. தலைநகர் டெல்லியின் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ்தளம் மழைநீரில் மூழ்கியது. அப்போது தரை தளத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். கீழ்தளத்தில் ஒரு வாயிலுடன் நூலகம் செயல்பட்டு வந்ததால், அங்கிருந்து மற்ற மாணவர்கள் வெளியேறிய நிலையில் உயிரிழந்த 3 மாணவர்களும் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் பயிற்சி மையங்கள் குறித்த கணக்கெடுப்பை டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவையும் மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. தொடர்ந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பயிற்சி மையங்களின் தரை தளங்களுக்கு சீல் வைத்தனர். அந்த வகையில் நேற்று இரவு வரை தொடர்ந்த நடவடிக்கையின்படி சட்ட விரோதமாக செயல்பட்ட 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தரை தளங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையங்களான குருகுல், சாஹல் அகாடமி, புளூட்டஸ் அகாடமி, சாய் டிரேடிங், ஐஏஎஸ் சேது, டாப்பர்ஸ் அகாடமி, டைனிக் சம்வாத், சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ், கேரியர் பவர், வித்யா குரு, வழிகாட்டுதல் ஐஏஎஸ், ஐஏஎஸ் ஈஸி ஆகிய 13 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த மையங்களுக்கு சீல் வைக்கப்பட்ட இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனர். இதற்கிடையே பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் தரை தளத்தில் நீரில் மூழ்கி 3 மாணவ, மாணவியர் பலியான சம்பவத்தை கண்டித்து, டெல்லி ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. பாஜக தொண்டர்கள் வளையல்களை தரை தளத்துடன் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

தலைநகர் டெல்லியின் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ்தளம் மழைநீரில் மூழ்கியது. அப்போது தரை தளத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். கீழ்தளத்தில் ஒரு வாயிலுடன் நூலகம் செயல்பட்டு வந்ததால், அங்கிருந்து மற்ற மாணவர்கள் வெளியேறிய நிலையில் உயிரிழந்த 3 மாணவர்களும் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் பயிற்சி மையங்கள் குறித்த கணக்கெடுப்பை டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவையும் மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.

தொடர்ந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த பயிற்சி மையங்களின் தரை தளங்களுக்கு சீல் வைத்தனர். அந்த வகையில் நேற்று இரவு வரை தொடர்ந்த நடவடிக்கையின்படி சட்ட விரோதமாக செயல்பட்ட 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தரை தளங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையங்களான குருகுல், சாஹல் அகாடமி, புளூட்டஸ் அகாடமி, சாய் டிரேடிங், ஐஏஎஸ் சேது, டாப்பர்ஸ் அகாடமி, டைனிக் சம்வாத், சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ், கேரியர் பவர், வித்யா குரு, வழிகாட்டுதல் ஐஏஎஸ், ஐஏஎஸ் ஈஸி ஆகிய 13 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த மையங்களுக்கு சீல் வைக்கப்பட்ட இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.

 

The post தரை தளத்துடன் சட்டவிரோதமாக செயல்பட்ட 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு ‘சீல்’: டெல்லி மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : DELHI ,NEW DELHI ,DELHI MUNICIPAL ADMINISTRATION ,Rajendra Nagar ,IAS ,Dinakaran ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்