×

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 50 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த அரசு பஸ்: 20 பேர் படுகாயம்

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் இருந்து அரசு பஸ் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நர்சிபட்டினம் நோக்கி நேற்று புறப்பட்டது. போரண்ணகுடேம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த ஆற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை வாகனம் மூலம் தவலேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜீப்புடன் அடித்து செல்லப்பட்ட தொழிலதிபர்: ஐதராபாத்தை சேர்ந்தவர் களிதிண்டி பனிக்குமார், தொழிலதிபர். கன்னவரத்தில் இருந்து காங்கிபாடு செல்லும் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாக பனிக்குமார் சென்ற ஜீப் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரது சடலத்ைதை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 50 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த அரசு பஸ்: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : East Godavari district ,Tirumala ,Rajahmundry, East Godavari District, Andhra Pradesh ,Narsipatnam ,Porannakutem ,
× RELATED ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்