×

அரியலூர் மாவட்டத்தில் புறவழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகள்

அரியலூர், ஜூலை 29: அரியலூர் மாவட்டத்தில் ஓவர்லோடு ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் சிமெண்ட் ஆலை டாரஸ் லாரிகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக 6 சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் தினசரி 25 ஆயிரம் டன்னுக்கு மேல் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் சிமெண்ட் பாக் செய்யப்பட்டு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

தினசரி பகல், இரவாக நூற்றுக்கணக்கில் சிமெண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் 50 டன் முதல் 100 டன் வரை ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு, அதிவேகத்தில் செல்கின்றனர். அதேபோல், சிமெண்ட் உற்பத்திக்காக முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புகல், சாம்பல் உள்ளிட்டவைகளை ஆலைகளுக்கு ஏற்றிச் செல்லும் 20 சக்கரங்களைக் கொண்ட 100 டன் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. டாரஸ் லாரிகள், பல்கர் லாரிகளும், நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளும் ஓவர் லோடு ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்கின்றன.

இதனால், சாலைகள் சேதமடைந்து, புழுதி பறந்து அப்பகுதியில் வசிப்போர், வணிகர்கள், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் தினறல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளால் மிகுந்த அவதியடைகின்றனர். அரியலூர் பகுதியிலுள்ள சுண்ணாம்பு சுரங்கத்திற்கும் அரியலூரை சுற்றி உள்ள சிமெண்ட் ஆலைக்கும் இடையே அரியலூர் நகரம் வழியாக தொடர்ந்து பள்ளிகள் திறந்திருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ட்ராஸ் லாரிகளே ஒடுகின்றன. ஆனால், 24 மணிநேரமும் அரியலூர் புறவழிசாலை வழியாக மிக வேகமாக, அதிக சுண்ணாம்பு கற்களுடன், கருங்கற்களுடன் செல்கின்றன.

அதே லாரிகள் மூலப்பொருட்களை இறக்கிவிட்டு, திரும்பும்போது, பந்தயத்தில் செல்வதுபோன்று, செல்வதால் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். கல்லங்குறிச்சி திரும்பும் புறவழிச் சாலை சந்திப்பில் சில ஆண்டுகள் முன்பு இந்த சுண்ணாம்புகல் லாரி மோதி 4 குழந்தைகள் இறந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

The post அரியலூர் மாவட்டத்தில் புறவழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகள் appeared first on Dinakaran.

Tags : Taurus ,Ariyalur district ,Ariyalur ,Dinakaran ,
× RELATED ரிஷபம்