சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிடுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் போலி பேராசிரியர்களால் நிரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 211 நபர்கள் மற்றும் அதில் தொடர்புடைய கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் மீது உடனடியாக குற்றவழக்குப் பதிவு செய்ய வேண்டும். தொடர்புடைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வதோடு, இணைப்புக் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரத்தையம் ரத்து செய்ய வேண்டும். அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மாற்றுக் கல்லூரிகளில் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
The post பல்கலை ஆசிரியர் நியமன மோசடி பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்: வேல்முருகன் கோரிக்கை appeared first on Dinakaran.
