×

பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்

 

பொன்னமராவதி,ஜூலை 27: பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் கார்கில் போரில் ஈடுபட்ட தியாகளை நினைவு கூறும் வகையில் கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனந்தி தலைமை வகித்தார். கார்கில் போர் வெற்றி பற்றிய கட்டுரை மற்றும் கவிதைகளை மாணவர்கள் வழங்கினர். கார்கில் போரில் தனது பங்களிப்பை தந்து வெற்றி வாகை சூடிய முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். இதில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வடிவேல், மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kargil Victory Day ,Phulangurichi ,Government ,College ,Ponnamaravati ,Phulangurichi Government College ,Bhulangurichi ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களுக்கு அபராதம்: இலங்கை...