சித்ரதுர்கா மாவட்டம், மொளகல்முரு தாலுகாவில் உள்ள மாணவர் விடுதிகளுக்கு தாசில்தார் டி.ஜெகதீஷ் திதிர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மாருதி பேருராட்சியில் மெட்ரிக் முன் ஆண்கள் விடுதி மற்றும் மெட்ரிக் பின் பெண்கள் விடுதிகள் உள்ளது. இங்கு, தாசில்தார் டி.ஜெகதீஷ் திதிர், திடீரென ஆய்வு செய்தார். அப்போது, விடுதிகளில் உள்ள கழிப்பறை, குளியலறையில் சுத்தமின்மை, வாளிகள் இல்லாதது, சுத்தமான குடிநீர் வசதி இல்லாதது, மெனுப்படி உணவு வழங்காதது, அடிக்கடி வாழைப்பழம், முட்டை வழங்காதது குறித்து புகார்கள் எழுந்தன.
அதற்கு அவர், மாணவர்களுக்கு தேவையான சோப்பு, தேங்காய் எண்ணெய், பேஸ்ட் கிட் வழங்காதது கவனிக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, ஊரிலிருந்து 3 கிமீ இந்த விடுதிகள் வெகு தொலைவில் உள்ளதால் தினமும் கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு ஆடைகள் வழங்கவில்லை, 2 ஆண்டுகளாகியும் புதிய பெட்ஷீட் வழங்கவில்லை, கொசுவலை அமைப்பு இல்லை, கொசுக்கடியால் தவிக்கிறோம். காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் பரவும் அச்சம் நிலவுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, பிசிஎம் விரிவாக்க அலுவலர் சேகர், தங்கும் விடுதியை கவனித்து வருகிறார். நாங்கள் விரும்பாவிட்டாலும், மேற்பார்வையாளர் பொறுப்பை ஏற்கும்படி, அழுத்தம் கொடுத்துள்ளார். இங்கு முக்கிய சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறேன், சேகரிடம் வருகைப் புத்தகம் மற்றும் நிர்வாகப் புத்தகங்கள் உள்ளன கூறினர்.இதையடுத்து, மாணவர் விடுதிகளில் உள்ள குளறுபடிகளை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்ததால் பார்வையிட்டேன் என கூறிய தாசில்தார், சம்பவ இடத்திலேயே கலெக்டருக்கு முழு தகவல் தெரிவிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post மாணவர் விடுதிகளில் தாசில்தார் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.