இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 29.1 ஓவரில் 115 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் பிராத்வெய்ட் 61, மிகைல் லூயிஸ் 26, கிர்க் மெக்கன்ஸி 12, அலிக் அதனேஸ் 2, கவெம் ஹாட்ஜ் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில், ஜேசன் ஹோல்டர் – ஜோஷுவா ட சில்வா ஜோடி பொறுப்புடன் விளையாடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 109 ரன் சேர்த்தது. ஜோஷுவா 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மறு முனையில் ஹோல்டர் அரை சதம் விளாசி அசத்தினார். 63 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்திருந்தது.
The post ஹோல்டர் – ஜோஷுவா பொறுப்பான ஆட்டம் appeared first on Dinakaran.