×
Saravana Stores

கன்வார் யாத்திரை விவகாரம் உ.பி., உத்தரகாண்ட் அரசுகளுக்கு விதித்த தடை ஆக.5 வரை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் காவடி தூக்கி கொண்டு டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் வரை யாத்திரை சென்று அங்குள்ள கங்கோத்ரி, ரிஷிகேஷ், நீல்கந்த், ஹரித்துவார் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களை வழிபடுவார்கள். கன்வார் யாத்திரை வழிகளில் அமைக்கப்படும் உணவகம், கடைகளில் உரிமையாளர்கள் தங்கள் பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் எழுத வேண்டும் என பாஜ ஆளும் உத்தரபிரதேச, உத்தரகாண்ட் மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 22ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி அமர்வு, கடைகளில் பெயர், முகவரி எழுதும் உ.பி., உத்தரகாண்ட் அரசுகளின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி அமர்வு, “நாங்கள் கடந்த 22ம் தேதி அளித்த எங்கள் உத்தரவில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை தெரிவிக்கும்படி யாரையும் உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். .

The post கன்வார் யாத்திரை விவகாரம் உ.பி., உத்தரகாண்ட் அரசுகளுக்கு விதித்த தடை ஆக.5 வரை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Supreme Court ,NEW DELHI ,Shiva ,Kavadi ,Delhi ,Gangotri ,Rishikesh ,Neelkanth ,Haridwar ,Kanwar ,UP ,Uttarakhand governments ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...