- முதல் அமைச்சர்
- ரனிபெட் மாவட்டம்
- அமைச்சர்
- ஆர் காந்தி
- ராணிப்பேட்டை
- விசி மோட்டார்
- மருதாலம்
- Panavaram
- தின மலர்
*அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை : வி.சி.மோட்டூர், மருதாலம், பாணாவரம் ஆகிய பகுதிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம் நடைபெற்றது. அதன்படி வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிவேடு, வி.சி. மோட்டூர், மாந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள், மனு அளிக்க ஏதுவாக வி.சி.மோட்டூர் ஊராட்சி சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். இதில் 15 அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், முகாமினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்து, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் கணினியில் பதிவு செய்வதை பார்வையிட்டார். தகுதியான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 10 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். மேலும் மனு கொடுத்து உடனடியாக தீர்வு காணப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளும், இரண்டு பயனாளிகளுக்கு மின்சார துறையின் மூலம் பெயர் மாற்றம், மின் கட்டணம் தீர்வை ஆகியவற்றிற்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜம்புகுளம், கேசவணாங்குப்பம், மருதாலம், செங்கல்நத்தம், வேலம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்கள் வழங்க ஏதுவாக மருதாலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன்(வாலாஜா) கலைக்குமார் (சோளிங்கர்) மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டாட்சியர்கள், பிடிஓக்கள், அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாணாவரம்: பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகேந்திரவாடி,வேப்பூர், கீழ்வீதி, துறையூர், உலியநல்லூர் ஆகிய 6 ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். டிஆர்ஓ சுரேஷ், ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, ஊராட்சி குழு மற்றும் திட்ட குழு உறுப்பினர் சுந்தரம்மாள்பெருமாள், மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்ஜிசி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பரணிகுமார் வரவேற்றார். முகாமை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்து,ஒவ்வொரு துறையாக சென்று பார்வையிட்டார். அப்போது தாசில்தார் ஜெயபிரகாஷ், பிடிஓக்கள் ரவிச்சந்திரன், தாஸ்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், ஆனந்திசெல்வம், சதாசிவம், கீதா வடிவேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம்: அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட வடமாம்பாக்கம், கைனூர், இச்சிபுத்தூர்,உளியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் மங்கம்மாபேட்டை பகுதியில் நேற்று நடந்தது. அரக்கோணம் தாசில்தார் தேவி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன், உமாமகேஸ்வரி, பாக்யராஜ், வெங்கடேசன், ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதில் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் சண்முகசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமரன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரஸ்வதி, மண்டல துணை தாசில்தார் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஓச்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமிற்கு
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ரஹ்மத்பாஷா தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி பிச்சாண்டி, சுலோச்சனா பிரகாஷ், சங்கீதா தாஸ், செல்லக்கிளி மூர்த்தி, வாலி மு.ஜெயமணி, ஆனந்தி கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை சேர்மேன் முனியம்மாள் கணேசன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, முன்னாள் வேலூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட தலைவர் சி.மாணிக்கம், வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தனர். மொத்தம் 421 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்தவர்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.