×

கொட்டித் தீர்த்த மழை மகாராஷ்டிராவில் 6 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மும்பை, புனே, தானே, பால்கர், ராய்காட், சதாரா ஆகிய மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. ராய்காட், தானே, பால்கர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மோசமான வானிலை மற்றும் ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் விமானம் இயக்குவது தாமதம் ஆகும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

மத்திய ரயில்வே வழித்தடத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாலங்கள் உடைந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மும்பையில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் ஷிண்டே வேண்டுகோள் விடுத்தார். மும்பை, தானே,புனே மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தானேயில் பார்வி அணை நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 2 பேர் பலியாகினர். லாவாசா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பங்களாவில் 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாலவ்லி பகுதியில் ரிசார்ட் மற்றும் பங்களாவில் தங்கியிருந்த 29 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post கொட்டித் தீர்த்த மழை மகாராஷ்டிராவில் 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Pune ,Thane ,Palghar ,Raigad ,Satara ,
× RELATED புனேவில் செல்போன் ஹாட்ஸ்பாட்டை பகிர...