×

சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்ட கோயில்களுக்கு ஒரு நாள், 2 நாள் சுற்றுலா: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவதற்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கப்பட்ட கடிதத்தை ஏற்று ஒரு நாள் கோவில் சுற்றுலா மற்றும் 2 நாட்கள் கோவில் சுற்றுலா சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பேருந்தின் மூலம் அழைத்து சென்று வருவதற்கான சுற்றுலா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் கோவில் சுற்றுலாவிற்கு காலை 6 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வளாகம், வாலாஜா சாலையிலிருந்து புறப்பட்டு திருமழிசை ஜெகநாதப் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், காலை 8 மணிக்கு திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், காலை உணவு இடைவேளை – காலை 11 மணி திருவள்ளூர்  வீரராகவ பெருமாள் திருக்கோயில், மதிய உணவு இடைவேளை – பிற்பகல் 3 மணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மாலை 5 மணிக்கு திருத்தணியிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்திற்கு வந்தடைதல் ஒருநாள் கோவில் சுற்றுலாவிற்கு கட்டணம் ஒரு நபருக்கு 18 இருக்கை குளிர்சாதன வசதியுடன் ₹1400, ஒரு நபருக்கு 18 இருக்கை குளிர்சாதன வசதி இல்லாமல் ₹1300 ஆகும்.

2 நாட்கள் கோவில் சுற்றுலாவிற்கு முதல் நாள் காலை 5 மணி சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வளாகம், வாலாஜா சாலையிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு கோவிலுக்கு செல்லுதல், இரவு திருத்தணியில் தங்குதல், 2ம் நாள் காலை 7 மணிக்கு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காலை உணவு இடைவேளை – காலை 11 மணிக்கு திருவள்ளூர்  வீரராகவ பெருமாள் திருக்கோயில், மதிய உணவு இடைவேளை – மாலை 4 மணிக்கு திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், மாலை 5.30 மணிக்கு திருநின்றவூர் ஜெகநாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், மாலை 6.30 மணி திருநின்றவூரிலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்திற்கு வந்தடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு கட்டணம் 2 நாட்கள் கோவில் சுற்றுலா ஒரு நபருக்கு 18 இருக்கை குளிர்சாதன வசதியுடன் ஒற்றை ₹7500, பகிர்வு ₹5400, குழந்தை ₹4700 ஆகும். 18 இருக்கை குளிர்சாதன வசதி இல்லாமல் ஒற்றை ₹6600, பகிர்வு ₹4900, குழந்தை ₹4300 ஆகும். இந்த சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9176995870, இலவச தொலைபேசி எண் 18004231111, தொலைபேசி எண்கள் 044-25333333,044-25333444 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்ட கோயில்களுக்கு ஒரு நாள், 2 நாள் சுற்றுலா: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur District ,Tourism Development Corporation ,Tiruvallur ,Tiruvallur district ,Tiruvallur district… ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...