- ஆம்னி பேருந்து
- மதுரை
- ஆம்னி பஸ் டிராவல்ஸ்
- திருவடன், ராமநாதபுரம் மாவட்டம்
- மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம்
மதுரை: மதுரையில் ஆம்னி பஸ் டிராவல்ஸ் அலுவலகத்தில் டிரைவரை தொடர்ந்து, கிளீனரை தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தனியார் பஸ் டிராவல்சில் டிரைவராக பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை நீர்குன்றத்தைச் சேர்ந்த பாலகருப்பையாவை அலுவலக அறையில் கட்டிப் போட்டு, டிக்கெட் பணத்தை எடுத்துக்கொண்டதாக கூறி உரிமையாளர் ராஜசேகர் மற்றும் நிறுவன ஊழியர்கள் அடித்து விசாரித்தனர்.
இதுகுறித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டிரைவர் பாலகருப்பையா புகாரின்படி, மதுரை மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிந்து, டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கிளீனரை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆம்னி பஸ் கிளீனரிடம் விசாரித்து தாக்கும் வீடியோக்களில் உரிமையாளர் ராஜசேகர் கேள்வி கேட்பதும், கை கட்டப்பட்ட நிலையில் அவரை கன்னத்தில் அறைந்தும், தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக அடிப்பதும் என காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
The post ஆம்னி பஸ் டிரைவரை தொடர்ந்து கிளீனரை கட்டி வைத்து தாக்குதல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.