×

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..!!

கொல்கத்தா: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். ஒன்றிய பட்ஜெட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஒன்றிய பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை எழுப்பின.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல் முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து மற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கூட்டத்தை புறக்கணிக்கின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், கேரள முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

The post நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,CM ,Mamata Banerjee ,Niti Aayog ,Kolkata ,Chief Minister ,Finance Minister ,Nirmala Sitharaman ,Budget ,Lok Sabha ,Union Budget ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு...