×

3 சட்ட திருத்தங்களை திரும்பபெறக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, ஜூலை 25: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஒன்றிய அரசு முப்பெரும் குற்றவியல் சட்டத்திருத்தத்தை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல பேரவை செயலாளர் பொன்.நக்கீரன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஐஎன்டியூசி மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன், ஏஐடியூசி பொறுப்பாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மனிதர்கள் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியில் சட்டங்களுக்கும், மத்திய அரசின் திட்டங்களுக்கும் பெயர் வைப்பதை கைவிட வேண்டும். சமஸ்கிருத மொழியில் பெயரிடப்பட்டு ஜூலை 1 முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களையும் உடனே திரும்பபெற வேண்டும்.

புதிய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும்.விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசின் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமானுஜம், வீரச்செல்வம், ஆபிரகாம், வீரமணி, பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 3 சட்ட திருத்தங்களை திரும்பபெறக்கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Mayiladudhara Kitappa Angadi ,EU government ,Labour Advancement Association Zonal Council ,Pohn ,NAKEERAN ,Dinakaran ,
× RELATED தனிக்குடித்தனத்துக்கு கணவர்...