×

நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடவில்லை ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?: பாஜ கேள்வி

புதுடெல்லி: டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகள் மூலம் இந்திய தேர்வு முறைக்கு உலகளவில் களங்கத்தை ஏற்படுத்துகிறார். ராகுல் காந்தி தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைகள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், அவர் வகிக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான கண்ணியத்தையும் மீறும் செயல்.

ஒருசில இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அதன் புனிதத்தன்மை முழுவதும் கெட்டு விட்டது என சொல்ல முடியாது என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற இந்த தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அரசு தேர்வு வினாத்தாள்கள் பலமுறை கசிந்துள்ளது. அரசு தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க பாஜ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

“2024-25 நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்கான அறிக்கை” என ராகுல் காந்தி கூறுவதை ஏற்க முடியாது. தேர்தலில் காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மக்கள் தொடர்ந்து நிராகரித்தால் அது பாஜவின் தவறல்ல” என ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

 

The post நீட் தேர்வின் புனிதத்தன்மை கெடவில்லை ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?: பாஜ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,BJP ,New Delhi ,Former ,Union Minister ,Ravi Shankar Prasad ,Delhi ,
× RELATED வெறுப்பு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி...