×

சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமைகள் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 7 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்போது கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் 5 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் மலையாள சினிமாவை சேர்ந்த ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் ஹேமா கமிஷன் விசாரணை அறிக்கையை வெளியிடக் மாநில தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று மாலை அறிக்கையை வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மலையாள சினிமா தயாரிப்பாளரான சஜிமோன் என்பவர் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட ஒரு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது.

The post சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமைகள் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Hema ,
× RELATED நடிகைகளுக்கு பாலியல் தொல்லை...