×

மாவட்ட கபடி போட்டி கேஎம்ஆர் சர்வதேச பள்ளி ெவற்றி

மதுரை, ஜூலை 25: மதுரை கேஎம்ஆர் சர்வதேச பள்ளியில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான மதுரை மாவட்ட அளவிலான கபடி போட்டி, கடந்த ஜூலை 13 மற்றும் 14ம் தேதிகளில் மதுரை கேஎம்ஆர் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்திலிருந்து 22 மாணவர் அணிகளும், 11 மாணவியர் அணிகளும் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் கே.எம்.ஆர் சர்வதேச பள்ளி பதினேழு வயதிற்கு உட்பட்ட மாணவர் மற்றும் பதினான்கு வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசுகளை தட்டிச்சென்றது.மாணவியர் அணியில் பதினேழு வயதிற்கு உட்பட்டோர் பிரிவினர் முதல் பரிசும், பதினான்கு வயதிற்கு உட்பட்டோர் பிரிவினர் இரண்டாம் பரிசம் பெற்றனர். இப்போட்டிகளில் பரிசு பெற்ற கே.எம்.ஆர் சர்வதேச பள்ளி மாணவர்களை, பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி பாராட்டினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தினார்.

The post மாவட்ட கபடி போட்டி கேஎம்ஆர் சர்வதேச பள்ளி ெவற்றி appeared first on Dinakaran.

Tags : District Kabaddi Tournament ,KMR International School ,Madurai ,CBSE ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...