×

சீனாவின் எல்லையோர கிராம மேம்பாட்டுக்கு ரு.1050கோடி

புதுடெல்லி: கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வடக்கு எல்லையையொட்டியுள்ள 46 தொகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதற்காக 2022-2023ம் ஆண்டு முதல் 2025-2026ம் ஆண்டு வரை ரூ.4800 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், சீன எல்லையையொட்டி உள்ள கிராமங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக 2024-2025ம் ஆண்டு ரூ.1050கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அருணாசலப்பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் மற்றும் லடாக் எல்லையோரங்களில் 19 மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் பயனடையும். இந்த கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், வெளியூருக்கு இடம்பெயர்வதை மாற்றுவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

The post சீனாவின் எல்லையோர கிராம மேம்பாட்டுக்கு ரு.1050கோடி appeared first on Dinakaran.

Tags : China ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய...