×

மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மாநகர பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்: மாநகர் போக்குவரத்துக்கழகம் தகவல்

சென்னை, ஜூலை 25: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: mமேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைத்திட பணிகள் நடந்து வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல மெட்ரோ ரயில்நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண். 18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக என்ஜிஓ காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடதிலேயே 25 சாதாரண கட்டண சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளன. மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மாநகர பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம்: மாநகர் போக்குவரத்துக்கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Medavakkam Highway ,City Transport Corporation ,CHENNAI ,Managing Director ,Municipal Transport Corporation ,mMetro ,Medavakkam ,Vanuvampet ,Medavakkam Kootrod ,Kilikatalla ,Madipakkam ,Purudivakkam ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...