×

சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் 2வது முறையாக நிறுத்தி வைப்பு

சின்னமனூர், ஜூலை 24: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் மேலப்பட்டி, சமத்துவபுரம், மூர்த்தி நாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அம்ருத் 2.0 திட்டத்தின் வாயிலாக சிறுசிறு ஊரணிகள் மற்றும் குளங்களை மீட்டு பராமரிக்கவும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், பேச்சியம்மன் கோயில் அருகில் இருக்கும் ஊரணியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கடந்த 13ம் தேதி, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, அருகில் உள்ள விவசாயிகளும், ஆக்கிமிரத்து வீடு கட்டியவர்களும், தாங்களாக அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள், ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஊரணி கரையொட்டி கட்டப்பட்ட 6 வீடுகளின் சுவர்கள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது முறையான ஆவணங்கள் இருப்பதாகக் கூறி அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2வது முறையாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் 2வது முறையாக நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Odaipatti ,Melapatti ,Samathuvapuram ,Murthy Nayakkanpatti ,Sukkangalpatti ,Villiayammalpuram ,Thenpalani ,
× RELATED சின்னமனூர் அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்