×

மானாமதுரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மானாமதுரை, ஜூலை 24: மானாமதுரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இம்முகாமில் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட மாங்குளம், தெற்கு சந்தனூர், தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர், மேலப்பிடாவூர், கீழப்பிடாவூர், மேலப்பசலை, சின்னக்கண்ணனூர், கீழமேல்குடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இதில் பட்டாமாறுதல், மகளிர்திட்டம், மருத்துவதுறை, ஊரகவளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கான சான்றுகளை மானாமதுரை எம்எல்ஏ தமிழரசிரவிக்குமார் வழங்கினார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், மானாமதுரை ஒன்றியக்குழு தலைவர் லதாஅண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, ஆணையாளர் ஜோசப்லூயிஸ் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மானாமதுரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister Project ,Manamadurai ,Chief Minister Project Camp ,Mankulam ,South Chandanur ,T. Puthukkottai ,Malenettoor ,Melapidavur ,Keezhapidavur ,Melappasalai ,Chinnakannanoor ,Keezamelkudi ,
× RELATED நாளை மக்களுடன் முதல்வர் முகாம்