×

சுத்தமல்லியில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் துவக்கம்

 

தா.பழூர், ஜூலை 24: தா.பழூர் அடுத்த சோழமாதேவி கிரீடு வோளண் அறிவியல் மையம், நபார்டு வங்கி ஆகியன சார்பில் உடையார்பாளையம் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா சுத்தமல்லி கிராமத்தில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற துவக்க விழாவுக்கு மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகுகண்ணன் வரவேற்றார். சென்னை நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த் விழாவினை துவக்கி வைத்து பேசுகையில், இந்த திட்டமானது பழங்குடியினர் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக அமையும்.

அதை சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்திய வேளாண் ஆராய்சசி கழகம், வேளாண்மை தொழில்நுட்ப செயல்முறை மற்றும் ஆராய்ச்சி நிலையம், மண்டலம்-10, ஹைதராபாத் இயக்குனர் முனைவர் மீரா கூறுகையில், இத் திட்டம் மூலம் 492 பழங்குடியினர் குடும்பங்கள் பயன்பெற உள்ளது. அதிலும், 492 பழங்குடியின மகளிரை தேர்வு செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மற்றும் வேளாண் அறிவியல் மையம் எடுத்துள்ள முயற்சி மிகவும் சிறப்பானதாகும் என்றார்.

திருச்சி நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பிரபாகரன், மையத்தின் பெருந்தலைவர் முனைவர் நடனசபாபதி, அரியலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்ரமனியன், பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் வாரிய உதவி இயக்குனர் விக்னேஷ். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக உதவி மேலாளர் சிவக்குமார் மற்றும் கால்நடை மருத்துவர் திருமதி ஜெயலட்சுமி ஆகியோர் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

இதில், முனைவர் திரவியம், முதுநிலை விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன் பேசினார். பழங்குடியினர் திட்டத்திற்கான ஆடு, மாடு, சோலார் விளக்கு, மண்புழு உரபை, அசோலா, முதலுதவி பெட்டி, வீட்டு காய்கறி விதைகள், இயற்கை இடுபொருள் தயாரிக்க தேவயான இடுபொருள், பண்ணை கருவிகள், தையல் மெஷின் ஆகியவை விழாவில் கலந்து கொண்ட பழங்குடியின மகளிருக்கு வழங்கப்பட்டன. இவ்விழாவில், காக்காபாளையம் தலைவர் சரவணன், பழங்குடியின மகளிர் 492 பேர் ஆகியோர் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் வட்டார பழங்குடியின மேம்பாட்டு திட்ட குழு தலைவி உஷா நன்றி கூறினார்.

The post சுத்தமல்லியில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sudtamalli ,Tha.Pazhur ,Tribal Development Project ,Suthamalli village ,Cholamadevi Creed Volan Science Center ,NABARD Bank ,Sudhamalli ,
× RELATED மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு...