கருர், ஜூலை 24: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வள மைய கட்டிடம் முன்பு படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கருர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதே போல், இந்த வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வள மைய கட்டிடம் கட்டும் பணி கடந்தாண்டு துவக்கப்பட்டு, பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வராத காரணத்தினால், கட்டிட வளாகத்தை சுற்றிலும் அதிகளவு முட்செடிகள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
எனவே, இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, கட்டிட வளாகத்தை துய்மையாக பராமரிப்பதோடு, விரைவில் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மாவட்ட வள மைய கட்டிட வளாகத்தை பார்வையிட்டு, முன்புறம அதிகளவு படர்ந்துள்ள செடி கொடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.