×

குமரி மாவட்டத்தில் சாரல் மழை

நாகர்கோவில், ஜூலை 24: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பகல் வேளையில் வெயில் கொளுத்த தொடங்கியது. நேற்று காலை வரை அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 19.6 மி.மீ மழை பெய்திருந்தது. குருந்தன்கோடு 13.4, தக்கலை 12.4, மயிலாடி 4.6, முக்கடல் 4.1, குளச்சல் 9, அடையாமடை 11.2, குருந்தன்கோடு 13.4, கோழிப்போர்விளை 19.6, மாம்பழத்துறையாறு 11, பெருஞ்சாணி 6.2, ஆனைக்கிடங்கு 10.6, முள்ளங்கினாவிளை 18.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.37 அடியாகும். அணைக்கு 477 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 380 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது. 252 கன அடி தண்ணீர் மறுகாலில் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.85 அடியாகும். அணைக்கு 304 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 15.05 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 67 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 15.16 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 15.5 அடியாக நீ்ரமட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 47.9 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாகும்.

The post குமரி மாவட்டத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Charal ,Kumari district ,Nagercoil ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார...