×
Saravana Stores

அதிமுக நிர்வாகி அடித்து கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராம பகுதியில் உள்ள நூலகம் அருகே 60 வயது முதியவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், அவர் அச்சம்தவிர்த்தான் கிராமம், அக்கிரஹாரம் தெருவை சேர்ந்த, அதிமுக கிளைச் செயலாளர் சின்னகுருசாமி என்றும், கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரை வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

The post அதிமுக நிர்வாகி அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Srivilliputhur ,Achamdavirthan ,Srivilliputhur, Virudhunagar district ,Akhraharam Street, Achamthavirthan village ,
× RELATED சுட்டீஸ் முதல் சுகர் உள்ளவர்கள் வரை...