×

பாலக்காடு யாக்கரை நதிக்கரையில் கிருஷ்ணர் கோயிலில் பாகவத பாராயண நிகழ்ச்சி கோலாகலம்

பாலக்காடு : பாலக்காடு யாக்கரை நதிக்கரையோரம் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் பாகவத பாராயண நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பாலக்காடு யாக்கரையில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் பாகவத பாராயணம் எரிமையூர் முரளி சிவானந்தாசிரமம் ஞானாசிரியர் தலைமையில் நடைபெற்றது.. கடந்த 16 ம் தேதி முதல் தொடங்கிய பாராயண நிகழ்ச்சி இன்று (23ம் தேதி) நிறைவடைகிறது.

17 ம்தேதி முதல் வராகாவதாரம், காளி அவதாரம், நரசிங்காவதாரம், கிருஷ்ணாவதாரம், ருக்மிணி சுயம் வரம் ஆகிய தலைப்புகளில் பாராயணம் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பாலக்காடு யாக்கரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். கடந்த ஒரு வாரமாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மூலவருக்கு விஷேச பூஜைகள், அவதார பூஜைகள் மற்றும் பஜனை பாகவத பாராயண நாட்களில் நடைபெற்றன. இதையடுத்து இன்று (23ம் தேதி) பாகவத பாராயண நிகழ்ச்சி விஷேச பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

 

The post பாலக்காடு யாக்கரை நதிக்கரையில் கிருஷ்ணர் கோயிலில் பாகவத பாராயண நிகழ்ச்சி கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Parayana ,Krishna Temple ,Yakarai River ,Palakkad ,Bhagavata parayana ,Bhagavata Parayanam ,Palakkad Yakarai ,Erimayur Murali Sivanandasiram Guru ,Yakarai ,River Krishna Temple ,
× RELATED மயிலாடுதுறையில் கிருஷ்ண ஜெயந்தியை...