×

திருநள்ளாரில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க ஆலோசனை கூட்டம்

 

காரைக்கால்,ஜூலை 23: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாறு சன்னதி தெருவில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தலைவர் சிவ சிவசங்கர சர்மா சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். சுந்தரர் ஐக்கிய பதிக பாராயணம் தேவாரம் நால்வர் வழிபாடு மேலும் ஆதிசைவ சிவாச்சாரியார் குழந்தைகளை கொண்டு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.

The post திருநள்ளாரில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adishaiva Sivacharyas ,Seva ,Tirunallar ,Karaikal ,All India Adisaiva Sivacharyas Seva Sangam ,Tirunallaru Sannathi Street ,All India ,President ,Sivashankara Sharma Sivacharya ,Vice President ,Thirunallar ,Adisaiva ,Sivacharyas Seva Sangh ,
× RELATED திண்டுக்கல் கோர்ட்டில் இ- சேவா...