×
Saravana Stores

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொமுச உறுப்பினர்களை மிரட்டிய தொழிற்சாலை நிர்வாகம் : வடமாநில தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைரலாகும் வீடியோ

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் ெதாழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை நிர்வாகம் தொமுச சங்கத்தின் மீது மிரட்டல் விடுத்துள்ளது. இதனால், வடமாநில தொழிலார்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் வீடியோ வைரலாகி வருகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வினோ மெக்கானிக்கல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தில் 93 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் குறிப்பாக 18 பேர் வடமாநிலத்தை சார்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். மேற்கண்ட அனைத்து தொழிலாளர்கள் பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு, போனஸ் தொகை உள்ளிட்ட சலுகை குறித்து தீர்வு காண ஏதுவாக திமுக தொழிலாளர் முன்னேற்ற அரசாங்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளி ஒருவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன் மணிமாறன் என்ற புதிதாக மனித வள மேலாளர் பணியமர்த்தப்பட்டார்.  இவர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை விட்டு அனைத்து தொழிலாளர்களும் வெளியேற வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கும்.

இல்லையென்றால் சங்கத்தில் இருக்கும் அனைவரும் வேலையில் பல காரணங்கள் காட்டி சோகாஷ் கடிதம் மற்றும் டிஸ்மிஸ் என நேரடியாக வீடுகளுக்கே சென்று மிரட்டி வருவதாக அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புகார் அளித்த நரேந்திர அஞ்சாங்கி உள்ளிட்ட வட மாநில இளைஞர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தால் மட்டுமே உங்களுக்கு தொழிற்சாலைக்குள் அனுமதி என மிரட்டி உள்ளனர்.

இந்த மிரட்டலுக்கு வடமாநில இளைஞர் ஒருவர் பயந்து நேற்று கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வட மாநிலங்களைச் சார்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பாதுகாப்பு அளியுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புகார் மனுவில் மேற்கண்ட தகவல்கள் குறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொமுச உறுப்பினர்களை மிரட்டிய தொழிற்சாலை நிர்வாகம் : வடமாநில தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Thomusa ,Kummidipoondi ,Chipkot Industrial Estate ,North State ,Sipkot Etazhilpetai ,Thomusa Sangha ,North ,State ,Chief Minister of Tamil Nadu ,Kummidipoondi… ,Kummidipoondi Sipkot Industrial Estate ,Tomusa ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...