- மாஞ்சோலை தோட்டம்
- மதுரை
- அமுதா
- ரோஸ்மேரி
- ஜான் கென்னடி
- மாஞ்சோலை, திருநெல்வேலி மாவட்டம்
- புதிய தமிழரசுக் கட்சி
- கிருஷ்ணசாமி
- Icourt
- மான்சோலாய்
- தின மலர்
மதுரை: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ரோஸ்மேரி, ஜான்கென்னடி, புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட தேசிய புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும், அங்கிருந்து வௌியேற்றவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக தமிழ்நாடு அரசின் டான்டீ நிறுவனமே, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்தலாமா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். பிபிடிசி நிறுவனம் தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வௌியேற்றக்கூடாது. கடைசி தொழிலாளி அங்கிருக்கும் வரை குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். அரசின் டான்டீ நிறுவனம் ஏற்று நடத்துவது குறித்தும் பதிலளிக்க வேண்டும்’’ எனக் கூறி ஜூலை 30க்கு தள்ளி வைத்தனர்.
The post மாஞ்சோலை எஸ்டேட்டை அரசு ஏற்று நடத்தலாமா? பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.