×

கம்பகரேஸ்வர சுவாமி கோயிலில் மகா ருத்ர யாகம்

 

திருவிடைமருதூர், ஜூலை22: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சரபேஸ்வரருக்கு நேற்று காலை ஏகாதச மகா ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் மகா மண்டபத்தில் உற்சவர் சரபேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் யாகத்தில் மகா தீபாராதனை நடைபெற்று, சரபேஸ்வரருக்கு புனித நீர் கட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சரபேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் அறிவுரையின்படி காசாளர் கந்தசாமி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post கம்பகரேஸ்வர சுவாமி கோயிலில் மகா ருத்ர யாகம் appeared first on Dinakaran.

Tags : Yaga ,Kambagareswara Swamy Temple ,Thiruvidaimarudur ,Kambakareswara Swamy temple ,Tirubhuvanam ,Thanjavur district ,Ekadasa ,Maha Rudra Yaga ,Sarabesvara ,Maha ,Yagam ,
× RELATED தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் வேத...