×

புதுக்கோட்டையில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு

 

புதுக்கோட்டை, ஜூலை 22: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23ம் ஆண்டு நினைவு தினத்தையோட்டி புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை சார்பில் சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23ம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மச்சுவாடியில் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இதில் சிவாஜி கணேசனின் ரசிகர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaji Ganesan ,Pudukottai ,Muthuraja ,president ,Thilakavathy Senthil ,Tilakam Sivaji Social Welfare Council ,Tilak Sivaji Ganesan ,
× RELATED விராலிமலையில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்