×

பிரப்பன்வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் குவியும் மணல்: தொடரும் விபத்து அபாயம்

 

மண்டபம், ஜூலை 22: ராமேஸ்வரம் – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரப்பன்வலசை பகுதியில் மணல் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் தொடர்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை பகுதியில் தனியார் பள்ளி அருகே சாலை ஓரத்தில் மணல் குன்று உள்ளது. இதிலிருந்து அடிக்கடி மணல் சரிந்து சாலை பகுதியில் பரவுகிறது. இதனால் இந்த சாலையில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் குவியும் மணலால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. குறிப்பாக டூவீலரில் செல்வோர் மணலால் சரிந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, இந்த பகுதியில் சாலையில் மணல் சரிந்து குவிவதை தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்பட வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு கருதி இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post பிரப்பன்வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் குவியும் மணல்: தொடரும் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Prapanwalasai ,Mandapam ,Rameswaram ,Ramanathapuram National Highway ,Prapanvalasai ,Ramanathapuram ,Mandapam Union ,Dinakaran ,
× RELATED எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல்...