×
Saravana Stores

திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வில் 25 பேர் ஆப்சென்ட்

 

தாராபுரம், ஜூலை 22: தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திஜி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தாராபுரம் எம்.எம் மருத்துவமனை, ராயல் கிளினிக், சூர்யா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். முகாமை கொளத்துப்பாளையம் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் சுமதி சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிகிச்சைகள், இதயம் சம்பந்தமான பரிசோதனைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ ஆலோசனை, எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலி, நுரையீரல் சம்பந்தமான சிகிச்சை ஆலோசனைகள், வயிறு, குடல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் சம்பந்தமான சிகிச்சைகள் உட்பட ஏராளமான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் எம்.எம். மருத்துவமனை மருத்துவர்கள் ரசூல், முஸ்திரி பேகம் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

The post திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வில் 25 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tarapuram ,Panchayat Union Middle School ,Gandhiji Nagar ,Kolathupalayam Municipality ,Tarapuram MM Hospital ,Royal Clinic ,Surya Paramedical College ,Surya Memorial Trust ,
× RELATED சூனாம்பேட்டில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்