- இளைஞர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
- கோயம்புத்தூர்
- ஜீவ ஜோதி அரங்கம்
- கத்தோலிக்க ஆயர் இல்லம்
- கோவையில் டவுன்ஹால்
- பிஷப்
- தாமஸ் அக்வினாஸ்
- முதல்வர்
- குருஜன் ஜோசப்
- தின மலர்
கோவை, ஜூலை 22: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆயர் இல்லத்தில் உள்ள உள்ள ஜீவஜோதி அரங்கில் இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் முதன்மை குருஜான் ஜோசப் வழிகாட்டுதலில், கோவை மறைமாவட்ட இளையோர் பணிக்குழு மற்றும் புனித வின்சென்ட் தே பால் சபை, மத்திய நிர்வாக குழு இணைந்து கருத்தரங்கை நடத்தியது.
இதில், கோவை மாநகர காவல் உதவி ஆணையர் சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளைஞர்கள் போதை என்ற அசுரனின் கைப்பிடியில் சிக்கக்கூடாது. வாழ்க்கையை முழுமையாக வாழ போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. போதை தவறான பாதை என கூறினார்.
இதில், அருட்பணி விக்டர், திண்டுக்கல் லைப் கேர் நிறுவன இயக்குநர், இளைஞர்களுக்கு போதை இல்லா வாழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதில், அருட்பணி ஆரோக்கியசாமி, அருட்பணி ஞானப்பிரகாசம், இளையோர் பணிக்குழு செயலர், புனித வின்சென்ட் தே பால் சபை, மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வின்சென்ட், தாமஸ், பிரதாப் தனிஸ் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
The post இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.