- வீரங்கல் ஓடை
- வானுவம்பேட்டை -
- உனலகாரம்
- ஆலந்தூர்
- ஆத்தம்பாக்கம் ஏரி
- வானுவம்பேட்டை
- புருதிவாக்கம்
- ஆதாம்பாக்கம்
- புருதிவாகம்
- தின மலர்
ஆலந்தூர், ஜூலை 22: ஆதம்பாக்கம் ஏரிக்கரையில் இருந்து செல்லும் மழைநீர் கால்வாய் உள்ளகரம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம் வழியாக செல்கிறது. பின்னர் இந்த கால்வாய் வீராங்கல் ஓடையாக உருவெடுக்கிறது. ஆதம்பாக்கத்தில் இருந்து புழுதிவாக்கம் வரையிலான ஓடையில் பல கோடி ரூபாய் செலவு செய்து தூர்வாரப்பட்டு, இருபுறமும் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், வானுவம்பேட்டை- உள்ளகரம் வழியாகச் செல்லும் வீராங்கல் ஓடை பகுதி மட்டும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சேறும் சகதியுமாக கோரைபுற்கள் வளர்ந்து நீர்வழித்தடத்தையே மூடியுள்ளது.
விரைவில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய், ஏரிக்கரை கால்வாய் தூர்வாரப்படுகின்றன. ஆனால், இந்த வீராங்கல் ஓடை மட்டும் இன்னும் தூர்வாரப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதே இல்லை. மழைக்காலத்தில், வீடுகளை வெள்ளம் சூழ்வதை தடுக்கும் வகையில், இந்த வீராங்கல் ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post வானுவம்பேட்டை – உள்ளகரம் இடையே வீராங்கல் ஓடையை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.