×

எல்லாபுரம் ஒன்றியத்தில் புதர்கள் மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, ஜூலை 22: பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி காணப்படும் சிறுவர்கள் பூங்காவை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என கோரிக்கை வலுக்கிறது. பெரிபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கடந்த 2016 – 2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்கள் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த உடற்பயிற்சி கூடமும், பூங்காவும் 3 ஆண்டுகள் திறக்கப்படாமல் கிடந்தது. அப்போது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொளியாக இவை இரண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தின் அருகில் உள்ள சிறுவர்கள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்காவில் புதர்கள் மண்டிக்கிடப்பதால் சிறுவர்கள் அச்சப்பட்டு விளையாட வருதில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீர் பூங்காவில் தேங்கி நிற்கிறது. எனவே புதர்கள் மண்டியும், தேங்கிய மழை நீரை அகற்றி பூங்காவை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பனப்பாக்கம் கிராமத்தில் கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டது. இதன் அருகில் சிறுவர்களுக்காக பூங்காவும் அமைக்கப்பட்டது ஆனால் தற்போது இந்த பூங்கா புதர்கள் மண்டியும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர்களின் நலன் கருதி பூங்காவை சுத்தம் செய்து அவர்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கூறினர்.

The post எல்லாபுரம் ஒன்றியத்தில் புதர்கள் மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Park ,Ellapuram Union ,Shrubs ,Oothukottai ,Panappakkam ,Periyapalayam ,Panappakkam village ,Peripalayam ,
× RELATED மண்டபம் பூங்கா அருகே சாலைப்பாலத்தில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை