×

விமான நிலையம் – மெட்ரோ ரயில் நிலையம் இடையே இலவச மின்கல ஊர்தி சேவை

 

சென்னை, ஜூலை 22: சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதேபோல் சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலைய முனையத்திலிருந்து, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் இடையே, இலவச மின்கல ஊர்தி சேவையை, சென்னை சர்வதேச விமான நிலையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மின்கல ஊர்தி சேவை, தினசரி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். சென்னை விமான நிலையத்தின் இந்த நடவடிக்கை பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post விமான நிலையம் – மெட்ரோ ரயில் நிலையம் இடையே இலவச மின்கல ஊர்தி சேவை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vimco Nagar ,Airport ,Central ,Parangimalai ,
× RELATED புரசைவாக்கம்- கெல்லீஸ் வரையிலான...