×

மூணாறு அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்து

 

மூணாறு, ஜூலை 21: மூணாறு அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள வட்டவடை ஊராட்சிக்குட்பட்ட கோவிலூர் பகுதியில் உள்ள பயணிகள் ஜீப் மூணாறுக்கு சவாரி நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஏழு மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட வாகனம் எல்லப்பட்டி மற்றும் குண்டளை எக்கோ பாயிண்ட் போன்ற பகுதிகளில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாறுக்கு சென்று கொண்டிருந்தது. ஜீப் மாட்டுப்பட்டி எஸ்டேட் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. 5 பேர் பயணம் செய்த நிலையில் ஜீப்பில் இருந்த ஓட்டுநர் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மூணாறு ஹை ரேஞ்ச் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post மூணாறு அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kovilur ,Vattavadai Panchayat ,Kerala ,Jeep ,Dinakaran ,
× RELATED மூணாறில் காரை சேதப்படுத்திய காட்டுயானைகள்: பொதுமக்கள் பீதி