- அவினாசி சாலை
- கோயம்புத்தூர்
- 26ஆம் வார்டு
- கவுன்சிலர்
- சித்ரா வெள்ளியங்கிரி
- கோவை தொகுதி
- எம்பி கணபதி ராஜ்குமார்
- பீளமேடு
- விளாங்குறிச்சி ரோடு-அவினாசி ரோடு
- தின மலர்
கோவை, ஜூலை 21: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கேட்டுக்கொண்டதன்பேரில், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார் நேற்று பீளமேடு பகுதியில் அவிநாசி ரோடு மேம்பால பணிகள் குறித்து ஆய்வுசெய்தார். இங்குள்ள, விளாங்குறிச்சி ரோடு-அவிநாசி ரோடு சந்திப்பில் மேம்பாலம் ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பீளமேடு முழுவதும் வியாபாரிகள், தனியார் நிறுவனத்தினர், மாணவ, மாணவிகள், சிறு குறு தொழில் செய்வோர் என பலதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஏறுதளத்தை மாற்றுஇடத்தில் அமைக்க வேண்டும் என கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மக்களை பாதிக்காத வகையில் ஏறுதளத்தை உயர்த்த முடியுமா? அல்லது அணுகு சாலையின் அகலத்தை உயர்த்த முடியுமா? என கணபதி ராஜ்குமார் எம்.பி. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நில எடுப்பு நடவடிக்கை முடிந்தவுடன் மீண்டும் நேரில் ஆய்வு செய்த பின்னர் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கலாம் என்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி, உதவி கோட்ட பொறியாளர் அகிலா ஆகியோரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மதிமுக மாவட்ட துணை செயலாளர் பயனீர் தியாகு, பீளமேடு பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி, திமுக பகுதி செயலாளர் துரை செந்தமிழ்செல்வன், வார்டு செயலாளர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வார்டு பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post அவினாசி ரோடு மேம்பாலம் பணி; கோவை எம்.பி. நேரில் ஆய்வு appeared first on Dinakaran.