×

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், ஜோஷுவா ட சில்வா – ஷமார் ஜோசப் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச… இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது (88.3 ஓவர்). போப் 121, டக்கெட் 71, கேப்டன் ஸ்டோக்ஸ் 69, வோக்ஸ் 37, புரூக், ஜேமி ஸ்மித் தலா 36 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி 3, சீல்ஸ், சின்க்ளேர், கவெம் ஹாட்ஜ் தலா 2, ஷமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன் எடுத்திருந்தது. கவெம் ஹாட்ஜ் 120, ஆலிக் அதனேஸ் 82, கேப்டன் பிராத்வெய்ட் 48, மிகைல் லூயிஸ் 21 ரன் எடுத்தனர். ஹோல்டர் 23, ஜோஷுவா ட சில்வா 32 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹோல்டர் 27, சின்க்ளேர் 4, அல்ஜாரி 10, ஜேடன் சீல்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 386 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில், ஜோஷுவா – ஷமார் ஜோசப் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 71 ரன் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 457 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது (111.5 ஓவர்). ஷமார் ஜோசப் 33 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வுட் வேகத்தில் அட்கின்சன் வசம் பிடிபட்டார். ஜோஷுவா 82 ரன்னுடன் (122 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4, கஸ் அட்கின்சன், ஷோயிப் பஷிர் தலா 2, மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 41 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

 

The post இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Nottingham ,Joshua Da Silva ,Shamar Joseph ,Trent Bridge ,West ,Dinakaran ,
× RELATED 3வது டி.20 போட்டியில் 8 விக்கெட்...