×

திருத்தணி முருகருக்கு காவடி சுமந்து பக்தர்கள் வழிபாடு

திருத்தணி, ஜூலை 21: ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடி கிருத்திகை சிறப்பு பெற்றதாகும். லட்ச கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து சாமிக்கு செலுத்தி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நேற்று காலை ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் முருகன் மலைக் கோயிலில் குவிந்தனர். மாட வீதியில் பொது வழியில் பக்தர்கள் சுமார் இரண்டு மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் ₹100 சிறப்பு தரிசன வழியில் ஒருமணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி கிருத்திகை விழா நெருங்கி வருவதால், திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மலைக் கோயிலில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post திருத்தணி முருகருக்கு காவடி சுமந்து பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Reverend ,Murugan ,Tiruthani ,Adi ,Adi Krittiga ,kavadi ,Thiruthani Muruga ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி...