×

விபத்து காப்பீடு திட்டத்தில் எளிமையான முறையில் சேர்ந்து பயன்பெறலாம் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தபால் துறை சார்பில் வழங்கப்படும்

திருவண்ணாமலை, ஜூலை 21: தபால் துறை சார்பில் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் எளிமையான முறையில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்திருப்பதாவது: தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பே மெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ஆண்டுக்கு ₹520, ₹555 மற்றும் ₹755 பிரீமியம் செலுத்தி ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை இழப்பீடு பெறும் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடும் இல்லாமல், தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களில் இந்த பாலிசியை பெற முடியும். மேலும், இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனையும் பெறலாம். எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விபத்து காப்பீடு திட்டத்தில் எளிமையான முறையில் சேர்ந்து பயன்பெறலாம் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தபால் துறை சார்பில் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai Postal Zonal ,Superintendent ,Rangarajan ,India Post ,Department of Posts ,
× RELATED 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்...