×

குடோனில் புகையிலை பொருள் பதுக்கிய 2 பேர் கைது 60 கிலோ, 2 பைக்குகள் பறிமுதல் போளூர் அருகே கடைகளுக்கு சப்ளை செய்ய

திருவண்ணாமலை, செப்.6: போளூர் அருகே கடைகளுக்கு சப்ளை செய்ய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 60 கிலோ புகையிலை பொருள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மு.அல்லிராணி, சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று போளூர்- சேத்துப்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், போளூர் பகதூர் தெருவை சேர்ந்த அன்பரசு(33) என்பதும், தேவிகாபுரம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் கடை வைத்துள்ள தினகரன்(33) என்பவர் பலருக்கும் பான்மசாலா உட்பட புகையிலை பொருட்களை விற்பதும், போளூர் மற்றும் சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய வாங்கி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தினகரனின் கடைக்கு பக்கத்தில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது அங்கு குடோன் போல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, சுற்றுவட்டார கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அன்பரசு, தினகரன் ஆகியோரது பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அன்பரசு, தினகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குடோனில் புகையிலை பொருள் பதுக்கிய 2 பேர் கைது 60 கிலோ, 2 பைக்குகள் பறிமுதல் போளூர் அருகே கடைகளுக்கு சப்ளை செய்ய appeared first on Dinakaran.

Tags : Kudon ,Bollur ,Tiruvannamalai ,Tiruvannamalai District ,Bolur Police ,Dinakaran ,
× RELATED குடோனில் போதை பொருட்கள் பறிமுதல் டீக்கடையில் குட்கா விற்பனை