×

தனியார் துறைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

 

தேனி, ஜூலை 20: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள ஏடிகே மில் உள்ளிட்ட 11 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்தனர்.

இம்முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் என மொத்தம் 81 பேர் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இதில் 31 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

The post தனியார் துறைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Employment Office ,Theni District Employment and Career Guidance Center ,Dinakaran ,
× RELATED தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்