×

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம்

 

தஞ்சாவூர், ஜூலை 20: தஞ்சையில் ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம் இன்று நடக்கயிருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்கல் தொடர்பான பொதுமக்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் அறிவுரையின்படியும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படியும் மக்களின் வசதிக்காக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று ஓட்டுனர் உரிமம் வழங்கல் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே முன்பதிவு செய்து கொண்ட ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மட்டும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

The post தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Book Festival Driver License ,Thanjavur Palace Complex ,Thanjavur ,District Transport Officer ,Thanjavur District ,Transport Officer ,P) Anand ,Thanjavur District Transport Office ,Book Festival Driver License Special Camp ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் கூட்டுப் பாலியல்...