×
Saravana Stores

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தான் அணியுடனான ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தம்புல்லாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. பெரோஸா, முனீபா இணைந்து பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர்.

பெரோஸா 5, முனீபா 11 ரன் எடுத்து பூஜா பந்துவீச்சில் வெளியேறினர். அலியா6 ரன், கேப்டன் நிடா 8 ரன், சிட்ரா அமின் 25 ரன், ஐரம்(0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 13 ஓவரில் 61 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. டுபா ஹசன் 22 ரன் எடுக்க, பாக். அணி 19.2 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது (3 பேர் டக் அவுட்).

பாத்திமா 22 ரன்னுடன் (16 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் தீப்தி 3, பூஜா, ரேணுகா, ஷ்ரேயங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 40 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), மந்தனா 45 ரன் (31 பந்து, 9 பவுண்டரி), ஹேமலதா 14 ரன்னில் அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத் 5 ரன், ஜெமிமா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Dambulla ,Women's Asia Cup T20 ,A division ,Peroza ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!