×

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: அமலாக்கத்துறை வழக்கில் முதன்மை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை காவல் முடிந்து நேற்று ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேலும் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

The post சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: அமலாக்கத்துறை வழக்கில் முதன்மை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Zabar Sadiq ,CHENNAI ,Zafar Sadiq ,Principal Sessions Court of Madras ,Jaber Sadiq ,Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு...