கரூர், ஜூலை 19: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு லட்சுமிபுரம் பகுதியில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்ய முயன்றதாக ஒருவர் மீது வழக்கு பதிந்து, அவரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கரூரில் 100 கிராம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.